Sri Harihara Puthra Iyanar Temple, Analaitivu — temple medallion

Sri Harihara Puthra Iyanar Templeஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் திருக்கோவில்

Nayinakulam, Analaitivu, Jaffna, Sri Lankaநயினாகுளம், அனலைதீவு, யாழ்ப்பாணம், இலங்கை

News Releaseசெய்தி வெளியீடு Ref.இல. EC/2026/02

For immediate releaseஉடனடி வெளியீட்டுக்கு

Special General Meeting on 9 December to appoint the Temple’s Management and Advisory Committees ஆலய முகாமைத்துவக் குழு, ஆலோசனைக் குழு நியமனத்திற்கான விசேட பொதுக்கூட்டம் — 09.12.2026

The court-appointed Receiver has called a Special General Meeting at the temple on Wednesday 9 December 2026 at 10:30 a.m. to appoint a five-member Management Committee and a ten-member Advisory Committee to run the temple and guide its reconstruction. All stakeholders are invited to attend.நீதிமன்றினால் நியமிக்கப்பட்ட பெறுநரின் தலைமையில், 05 பேர் கொண்ட முகாமைத்துவக் குழுவையும் 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவையும் நியமிப்பதற்கான விசேட பொதுக்கூட்டம் 09.12.2026 புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெறும். ஆலயத்துடன் அக்கறையுடைய அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Special General Meeting on 9 December to appoint the Temple’s Management and Advisory Committees

— The court-appointed Receiver of the Analaitivu Sri Harihara Puthra Iyanar Temple has called a Special General Meeting of everyone with an interest in the temple. It will be held on Wednesday, 9 December 2026, at 10:30 a.m. in the temple forecourt, with the Receiver in the chair.

In a notice dated 20 November 2026 and posted at the temple, the Registrar of the Kayts Court explains that, while trust property case No. 38/24 is before the Kayts District Court, the Court, at the request of the lawyers for both parties, appointed the Registrar as Receiver to administer the temple. On 25 September 2026 the Receiver reported to the Court and sought permission to ease the temple’s operations and to move the construction forward. The Court granted that permission on 16 November 2026.

What the meeting will appoint

  • A five-member Management Committee to carry out the temple’s daily operations and take the reconstruction work forward under the Receiver: one member from among the five plaintiffs; two from among the defendants who held key positions in the previous administration; and two from among the temple’s other stakeholders.
  • A ten-member Advisory Committee, made up of people with relevant professional expertise and representatives of every ward of the island, to advise on and monitor the construction until the Kumbabishekam.

The Receiver asks all stakeholders of the temple to attend and to give their cooperation for the temple’s progress.

Meeting details

  • Date: Wednesday, 9 December 2026
  • Time: 10:30 a.m. (Sri Lanka time)
  • Venue: Temple forecourt, Sri Harihara Puthra Iyanar Temple, Analaitivu
  • Chair: The court-appointed Receiver

The original notice
The notice was issued in Tamil and is reproduced in full on the Tamil version of this page. View the original notice as posted at the temple (PDF). This summary is provided for convenience; the Tamil original is the authoritative text.

— ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்றினால் இவ் ஆலயத்தை நிர்வகிப்பதற்கு நியமிக்கப்பட்ட பெறுநர் (ஊர்காவற்றுறை நீதிமன்றப் பதிவாளர்), 2026 கார்த்திகை 20 ஆம் திகதியிட்ட பின்வரும் அறிவித்தலை ஆலயத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.

கூட்ட விபரம்

  • திகதி: 09.12.2026, புதன்கிழமை
  • நேரம்: முற்பகல் 10.30 மணி
  • இடம்: ஆலய முன்றல்
  • தலைமை: பெறுநர்
  • நோக்கம்: 05 பேர் கொண்ட முகாமைத்துவக் குழுவையும், 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவையும் நியமித்தல்

மூல அறிவித்தல்
ஆலயத்தில் காட்சிப்படுத்தப்பட்ட மூல அறிவித்தலைப் பார்வையிட (PDF)

அனலைதீவு திருவருள் மிகு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் திருக்கோயில்
விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்

இவ் ஆலயத்துடன் அக்கறையுடைய தரப்பினர்கள் அனைவருக்கும்,

அன்புடையீர்,

இவ் ஆலயம் தொடர்பாக ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்றில் நம்பிக்கைச் சொத்து 38/24 என்ற வழக்கு நடைபெற்று வருகின்ற நிலையில் குறித்த வழக்கில் இருதரப்பு சட்டத்தரணிகளின் கோரிக்கையின் பிரகாரம் கௌரவ மன்றினால் ஊர்காவற்றுறை நீதிமன்ற பதிவாளர் ஆகிய என்னை குறித்த ஆலயத்தினை நிர்வகிப்பதற்கு பெறுநராக நியமிக்கப்பட்டுள்ளேன். அதன் பிரகாரம் குறித்த ஆலயத்தினுடைய செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காகவும், கட்டுமானங்களை முன்னெடுத்து செல்வதற்காகவும், 25.09.2026 ஆம் திகதியன்று பெறுநரால் மன்றிற்கு அறிக்கையிடப்பட்டு அனுமதி கோரியதன் அடிப்படையில் 16.11.2026 அன்று கௌரவ மன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.

குறித்த அனுமதியின் பிரகாரம் பெறுநரின் கீழ் ஆலயத்தின் நாளாந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் புனர்நிர்மாண வேலைகளை முன்னெடுப்பதற்கும் ஏதுவாக 05 பேர் கொண்ட முகாமைத்துவக் குழுவையும், (வழக்காளிகள் ஐவரில் இருந்து ஒருவர், எதிராளிகளில் கடந்த நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புக்களை வகித்தவர்களில் இருந்து இருவர் மற்றும் ஆலயத்தின் அக்கறையுடைய தரப்பினர்களில் இருந்து இருவர்) மற்றும் கும்பாபிஷேகம் வரைக்குமான காலத்தில் கட்டுமானம் நடைபெறும் நேரங்களில் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காகவும், கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்காகவும், துறைசார்ந்தவர்களையும், அத்துடன் வட்டாரங்கள் அனைத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்தி 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவையும் நியமிப்பதற்கு ஏதுவாக எதிர்வரும் 09.12.2026 புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு ஆலய முன்றலில் பெறுநர் தலைமையில் விசேட பொதுக்கூட்டம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இவ் ஆலயத்துடன் அக்கறையுடைய தரப்பினர்கள் யாவரும் கலந்து கொண்டு குறித்த ஆலயம் வளர்ச்சி பெறுவதற்கு தங்களின் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

2026 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 20 ஆம் திகதியாகிய இன்று.

பெறுநர்,
அனலைதீவு திருவருள் மிகு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் திருக்கோயில்,
அனலைதீவு – 05.

###

About the temple

Thiruvarulamiku Pooranaidevi Pushkaladevi Udanuarai Sri Harihara Puthra Iyanar Thirukovil stands at Nayinakulam, Analaitivu, an island off the Jaffna peninsula in northern Sri Lanka. By tradition, about 450 years ago a wooden chest carried ashore by the western sea was found to enshrine Lord Iyanar, and the temple has since been the guardian shrine of the island community.

Media contact

Office Temple Office, Sri Harihara Puthra Iyanar Temple
Telephone / WhatsApp +94 77 945 4141

Issued by

Executive Committee
Sri Harihara Puthra Iyanar Temple, Analaitivu

ஆலயம் பற்றி

திருவருள்மிகு பூரணைதேவி புஷ்காலாதேவி உடனுறை ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயனார் திருக்கோவில், வட இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டை அடுத்துள்ள அனலைதீவின் நயினாகுளத்தில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 450 ஆண்டுகளுக்கு முன், மேற்குக் கடல் அலைகள் கரைசேர்த்த மரப்பெட்டியினுள் ஐயனார் எழுந்தருளியிருந்ததாக மரபுவழி வரலாறு கூறுகிறது; அன்று முதல் இவ்வாலயம் தீவுச் சமூகத்தின் காவல் தெய்வ ஆலயமாக விளங்குகிறது.

ஊடகத் தொடர்புகளுக்கு

அலுவலகம் ஆலய அலுவலகம், ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் திருக்கோவில்
மின்னஞ்சல் info@analaitivuiyanar.org
தொலைபேசி / வாட்ஸ்அப் +94 77 945 4141
இணையத்தளம் www.analaitivuiyanar.org

வெளியிடுவோர்

நிர்வாக சபை
ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் திருக்கோவில், அனலைதீவு