Traditional Tamil hymns to the Analaitivu Iyanar — the Thothiram collection and the Keerthanais, together with the sacred origin legend of the temple. Best read in Tamil. அனலைதீவு ஐயனார் மீதான பாடல்கள் — தோத்திரத் திரட்டும் கீர்த்தனைகளும், ஆலய வரலாறும்.

அனலைதீவு ஐயனார் தோத்திரத் திரட்டு

வரகவி முத்துக்குமாரப் புலவரும்
திரு. ஆ. ஐயாம்பிள்ளைப் புலவரும் பாடியவை

காப்பு

கலித்துறை

பொன்னங் கொடியும் பொருந்து மலர்வாசம் பொற்புதனில்
தன்மக ளாகிய ஆலயம் மேவிய சாத்தனாரை
என்னக மீதி லிருத்தித் துதித்து இறைஞ்சுதற்குப்
பன்னக மேனியன் முன்னருள் சேயும் பரிந்தருளே

ஆசிரிய விருத்தம்

உத்தம சுகந்தபரி பூரண னெந்தகோ
யுனதுபத தாமரையதா
மொண்மலர் கசிந்துவழி வருளெனுந் தேனையா
னுள்ளநிறையக் கொள்ளவே
நித்தமுந் தாவுனை நினைத்துத் துதித்துமனம்
நேசிக்க ஞானவருள்தா
நிறைவுறு கருமையுங் கல்வியுஞ் செல்வமும்
நீடாயுளும் பெரிதுதா
நத்தமுறு மத்தற்கும் முத்தற்கும் நல்வரகி
நட்பிற் பெறும் புதல்வரே
நற்புலன நெறியுயிர்கள் கற்றுணர வுற்றுறையும்
நாதனே சிவபோதனே
அத்தமணி பெற்றுமுடி பேற்றகை யரசுபுரி
லட்சர சதாநயநமே
ஆதிருத் திரரூப செகதம்ப காளகட
அரிஹர குமாரநமவே
உப்புக் கசிந்துநினை மொக்கக் கலந்துதிர
முற்றுக் குழைந்தகுழியி
னுட்பட் டிடுங்கழுதை துக்கப் படுத்தமல
மொக்கச் செறிந்தபாண்டம்
வெப்புற் றிடும்பலபொ யிட்டுப் பொதிந்தபொதி
மிக்கப்பெருப் பவமதாம்
வித்திட் டிடுங்கூடு ரத்தக் குணப்பாடு
மெத்திக் கிடந்தவீடு
இப்பெற்றி கொண்டனடி யைப்பெற் றிடாதநா
னெப்பெற்றி யாளாகுவே
னினியுன தடைக்கல முனக்கபய முன்தஞ்ச
மென்னையடிமை கொண்டருளுவாய்
அப்பிற் படும்பவள மொப்பிற் பெருஞ்சடில
அனலயந் தேவநமவே
ஆதிருத் திரரூப செகதம்ப காளகட
அரிஹர குமாரநமவே
மாதா வயிற்றிற் செனித்துப் பிறந்தறிவு
வந்திந்த வயதாகியும்
வாணாள் கழிக்கவழி யறியாத யானிந்த
மாயப்பிர பஞ்சமென்னும்
பாதாள மீதிற் புகுந்துகலி யென்றிடும்
பாரமலை யேச்சுமந்தே
பஞ்சபா தகமெனும் வலையினுட் சிக்கியே
பலநாளு மழுதகுரலுன்
காதார நுளையுமே ஐயனே யினியுன்
கடைக்கணரு ளைப்பரப்பிக்
கலியையும் பிணியையும் வலியதீ வினையையுங்
காலா லுதைத்துருட்டி
ஆதார மாஹிநின் றடிமைகொண் ดருள்புரியு
மணலயத் தேவநமவே
ஆதிருத் திரரூப செகதம்ப காளகட
அரிஹர குமாரநமவே
சந்தமிகு பொன்னொளி தயங்குதரு நீழலுறை
தலைவன்முதல் யாருமன்றித்
தனிவனந் தனிலுனது கையடையதாகியுறை
தமிழனாகிய சரியையே
வந்துஅச முசிபற்ற வெலியுபுலி வாயிலுறும்
மானென்ன மதியழிந்தே
வரதனே செண்டலங் காரனே ஐயனே
வாவா வெனக்கூவியே
சிந்தையி னிரங்கியுழு சசியைவிடு வித்துவரு
தீயவள்கை யற்றுவிழவே
திருவுள மிரங்கியருள் கடவுளே யுன்புதுமை
செப்புதற் கெளிதாகுமோ
அந்தமிகு தவளமத தந்திபிட் ருந்திவரு
மணலயத் தேவநமவே
ஆதிருத் திரரூப செகதம்ப காளகட
அரிஹர குமாரநமவே
சீதசந் திரசோதி நளினமுக பிரபையுஞ்
செம்பதும ரத்னகுழையுஞ்
செண்டலங் காரமுங் கண்டிகையு நீறூடு
தேகமுஞ் சிவயோகமும்
மூதண்ட முகடளவு மகுடமுந் திசையெலாம்
முடிவரு நெடியசடையும்
முக்கண்ணு மரவணியும்குமா லிகையுமெழில்
முறுவற்கிரு பைப்பெருக்குஞ்
சோதிசா மலவர்ண வகளங்க சயபுயச
சுந்தர மலந்தமுத்துத்
தொங்கல்கங் கணமங்க தம்பொன்னினரைஞாண்
துலங்கவந் தருள்புரிகுவாய்
ஆதபத் திரநீழல் தந்தெமக் கருள்புரியு
மணலயத் தேவநமவே
ஆதிருத் திரரூப செகதம்ப காளகட
அரிஹர குமாரநமவே
கோதிச் சுழித்தமுடி யழகமசை யைக்கட்டு
கொத்துமுத் தாரமசையக்
கொங்குற்ற கோதையும் தங்கரத் தினபொற்
குமிப்புஞ் சிமிப்புமசையக்
காதிற் செறிந்தகுண் டலமசைய விருவிழிக்
கயலசைய வதனசந்த்ர
காந்தியசை யப்பவள வாய்முத் தரும்பவொளி
கைக்கமல வளையலசையச்
சீதச் செழுங்களப தளவியணி வாரினைச்
சினவுதன கும்பமசையத்
திருமருவு துணைவியர்க ளிருபுறமு மசையவரு
தெளிகருணை வாரியெனவே
ஆதிக்க மாய்நடுவி லுறைகின்ற மணிவர்ண
அனலயத் தேவநமவே
ஆதிருத் திரரூப செகதம்ப காளகட
அரிஹர குமாரநமவே
கருமுசிற் றயமெதெவ வருகினத் தெருமைபல
கவையாடிப் படாடவமே
கபளபோட்டுடையநிறைதரனமெற்றிடவெருவு
கரியகட கயலலவியே
வருசரந் தினில்வேறளி வாலபூயிற் சூலசிந்தி
வளசப் பறம்பிளந்து
மாவினிற் கவியை முட்டித் தெங் கினம்பாளை
மடலைக் கிழித்துவாவிப்
பெருமுதத் தளிதளிந் தினமுளைக் களவியிற்
பிறளும்வரி கெளையுருட்டிப்
பிறனத் திரவினுந் தலைமைடக் குருகிலும்
பிடரிகைப் படமோதியே
அருகினிற் றண்டலைக ளமருமநர் பெருவளமை
அனலயந் தேவநமவே
ஆதிருத் திரரூப செகதம்ப காளகட
அரிஹர குமாரநமவே
மிடலகொ ளந்தனெ தந்திமேல்வரும் மாசாத்த
விமல வமலாவரிய
வேதாந்த நாயகா சாத்நா புறத்தவா
மெய்ஞ்ஞான சிவசொரூபா
படவரவு கங்கண ஐங்கரற் கிளயவா
பரமேஸ்வரன் புத்திரா
பாரிடசு ணாதிபா செண்டலங் காரா
பசும்பொற்பிர காசசடிலா
கடல்நிறக் கடவுளே புராண புட்கலை
கருத்துநிறையுங் கணவனே
காரியே மிருகருணை வாரியே குருமாது
கணவறுக் கொழுந்தனைனே
அடல்கொள்ளுக் குடசூசை லங்கார பிரதாப
அனலயந் தேவநமவே
ஆதிருத் திரரூப செகதம்ப காளகட
அரிஹர குமாரநமவே
மனசவல னந்நூறு கோவைவண் வைமுதற்
பபொளினங் கள்தன்னூரி
பனியுறு காரிமகு ரூபியள காதிபகி
பராராசன் நீயெனலவே
சென்றடைகுனா கொண்டுடின் சென்றடைகுரி யவர்புறத்
தினையளயீ சொந்திங்குறினுந்
தினையளவு மென்னூார்கள் தீரா வெகுந்தையொடு
சித்திரப்பொறி போலுறும்
வஞ்சமிகு நெஞ்சரைக் கனவிலும் நினைவிலும்
மற்றுள் பிறப்பிலேனும்
மதியாம லெள்ளளவு முன்னடி வணங்குநல்
வரமெனக் கருள்புரிகுவாய்
அஞ்சன மணிப்பிரபை யஞ்சவெழில் மிஞ்சுசுக
அனலயந் தேவநமவே
ஆதிருத் திரரூப செகதம்ப காளகட
அரிஹர குமாரநமவே
சுத்தப்ர காச வட்டப்ர மாகாச
சுளிவட்ட முகடுமுட்டத்
துரியமு லாதார அளவுகண் டோடியே
சுழலுமொரு பிரணவமதாஞ்
சத்தத்தில் நாதமாய் விந்துவாய் விந்துவிற்
றங்கியெழு பஞ்சகிர்த்தியத்
தலைமையா யைம்பூதநிலைமையா யதில்வருஞ்
சரமசர சீவத்தவச்
சித்தத்தில் நின்றுயர் நிருத்தஞ்செய் தடியார்கள்
தீவினைக் கதவடைத்துச்
சென்மவழி யைக்காட்டி நன்மைவழி காட்டுமூன்
திருவுளக் கருணையெளிதோ
அத்தத் திருச்செண்ட லங்கார மாசாத்த
அனலயந் தேவநமவே
ஆதிருத் திரரூப செகதம்ப காளகட
அரிஹர குமாரநமவே

ஐயனார் திரு ஊஞ்சல்

காப்பு

கரந்தைபுனை கண்ணுதலுங் கண்ணன் றானுங்
களிப்புடனே கலந்துதவு காரி தன்மேல்
உரந்தருபொன் னூஞ்சலிசை யோது தற்கு
உம்பல்முகத் துடனுதித்தெவ் வுலகு முய்யப்
புரந்தரன்பூ சனையியற்றப் பொன்னி யாற்றைப்
பூங்காவில் வரச்செய்த புனிதன் றன்னை
நிரந்தரமா யுயிர்தோறும் நிறைந்து நிற்கும்
நின்மலனை மைங்கரன்றாள் நினை குவோமே

நூல்

இரவியெழு நழுவிருநாகந் தூண தாக
இடையிலுறு மொருநாகம் விட்டமாகப்
பரவுபண பாயிர்மேல் வராக நாகம்
படக்கிடங்கு மொருநாகம் பருநா ணாக
மரபினுயர் மேல்நாகச் சுவாராஞ் சக்ர
வாளவட்டப் பூநீலம் பலகை யாக
உரமுறுநான் முகன்படைத்த ஊஞ்சல் மீதி
உய்யவுல கையனே ஆடீ ரூஞ்சல்.
சந்திரசூ ரியர்கரண கவிகை தாங்கச்
சமன்நிருதி யாவடல்லந் தடம்கை யேந்த
இந்திரன்கா ளாஞ்சிசா மரங்கால் கொள்ள
இருநிதிமன் னவளடைப்பை யிளிது தாங்க
அந்தமில்சீர் வருணன்கைக யுடையாள் பற்ற
அனலநக ராரியரே ஆடீ ரூஞ்சல்
சுந்தரஞ்சேர் பூணையுட் கலைபங் காகத்
துய்யதிற லையனே ஆடீ ரூஞ்சல்.
பாதாளப் பெருங்கடலின் நடுவ ணாகப்
பல்காளப் பன்னாகப் பணமேலோறு
கூகாஎன கண்டவுருக் கொள்ளு வோனும்
கொடுமைபட வருசூரைக் கெடுத்தங் காளை
ஏகாளி யுகரத்தை யீர்க்கும் வாளை
யிடைசேர்த்துக் கடைகாத்தெடுப் போதும் நிற்கும்
மாகாளர் படையுடனே போற்றி செய்யும்
மாசாத்துப் பெருமானே ஆடீ ரூஞ்சல்
போரேற்று ஜகதம்பிணிக்கும் வள்ளா ரார்ப்பப்
பொங்குபங்க நீக்கயல்கள் புரண்டு தாவித்
தூராற்றுந் தருவினிறால் தீளிக்கச் செந்தேன்
துள்ளருவி வெள்ளமனைத் தூம்பு தாங்கும்
பேராற்றும் வளயினார குளக்கட்கோயில்
பெரிதுவந்த ஆரியரே ஆடீ ரூஞ்சல்
நீராற்றுஞ் சடலரன்மான் மகவாய் வந்த
நித்தியயு ரணைசாத்தா ஆடீ ரூஞ்சல்
வானவர்கள் மன்னவர்கள் வாழ்த்தி நிற்ப
மாதர்மா முனிவர்கணம் வாழ்த்தி நிற்ப
ஈனமில்லா மறையவர்பால் வாண்டி சைப்ப
இசையிசைத்துத் தும்புருநார தர்கீ தமேத்தக்
கானமலி திருஅனலப் பதியில் மேவு
கடிபுஷ்ப நயனநிறந் குணமே மேவா
யானதிருக் கோயிலெனக் கொண்ட நாதா
அரிஹரபுத் திரப்பெரும ஆடீ ரூஞ்சல்.
கன்னலொடு செந்நெல்விளை துன்னும் வன்னைக்
கம்பயினும் வயலையய லியலுங்காளி
பொன்னளிர்கொண் கமலமலர் சொரியு முத்துங்
புயலமுதியி னுதயமெனப் பொருந்து செந்தேன்
மின்னிய செங்காலி மலரங்கும் வாவீ
விளங்குசீ ரணைநகர்ப் பதியில் மேவி
மன்னியபூந் தன்னுபொன் னையத்தில் வாழும்
மாஸ்த்தரே மாசாத்தா ஆடீ ரூஞ்சல்.
செம்மலர கயடயாத ஆதிட ரோடும்
திரிசடைமச் செஞ்சடைக் கூத்தருக் காற்று
விம்மியிவர்ந் தாகள், சதுக்கம், தெற்றி, வீதி
யெையலித்து மொழுத்துமு மறைவர் நீரே
கும்மெனுரித் திருஅனலை கோயில கொண்டட
காரணரே யெய்யம்மயிரத் காத்தெந் நாளு
மம்மயினிற் சுடர்டிகள் யாறா நீக்கி
யிருப்பவரே மாசாத்தா ஆடீ ரூஞ்சல்
கொண்டலெவு விடுதாழை வாழை தாலிக்
குடக்கணிலின் மடக்கியல்கள் குடுகொண் டேறி
விண்டுளுது சொரிபலவின் கனிகள் சிந்தும்
வியன்புளநத் தலைநகர விளங்க வந்த
செண்டுளவு கரத்தளரே ஆடீ ரூஞ்சல்
திகழனலை வாரியனே ஆடீ ரூஞ்சல்
அண்டர்தமக் காரமுதே ஆடீ ரூஞ்சல்
அரியாரூர் புத்திரரே ஆடீ ரூஞ்சல்

வாழி

சித்தரான ரமைம்மாமுரி சேவல் வாழி
திறன்மதன் காளாயுதச் சேனை வாழி
சந்தனுநற் பூரணையுட் கலையும் வாழி
சதுர்வேத வார்ச்சிரம தருமம் வாழி
ஊத்தை குடியன் உதிரா காளி
காத்தவ ராயன் கலங்கிட வருக
மாட னிருளன் மற்றுள பேய்கள்
சாடா தென்னைத் தாங்கிட வருக
காளி கறுப்பன் காட்டு மிர்களைத்
தூளிப் படுத்தத் துரத்திநீ வருக
காய்ச்சலு மிருமலுங் கட்டுப் படப்பயிலும்
சீச்சலு மந்நோயும் பெயிமடான் வருக
வாதமும் பித்தமும் வந்தியுப் மாந்தமும்
ஒதிடு மவர்வினை யோட்டிட வருக
தொங்கலுஞ் சன்னியு தோஷமு சச்சமும்
மங்கிட என்றுமுன் வருக வருக
ஒன்பது கிரக முடன்பகைத் தாலும்
அன்புடன் காக்க ஐயனே வருக
மன்னரு மூலமும் வாசப்பதை தெளிந்தும்
உண்மையான நிலைக்க லோடியே வருக
சந்ததி தோஷமுன் னாதிகள் அமைத்தத்
துந்திரு மாறு தம்பியென் வேண்டினன்
அமைவயம் பதயுறை ஐயனே சரணம்
அரிஹர குமார ஆதி நமஸ்தே.

—வரகவி, முத்துக்குமாரப்புலவர்.

[இந்த ஐயனார் கவசத்தைத் தினந்தோறும் காலை மாலை கிரமமாக ஓதிச் செபஞ்செய்து வந்தால் கிரகப் பகையும், பிணியும் வறுமையும், பேய், பிசாசு, சூனியங்களாலுண்டாகுந் துன்பமும், பழி பாவங்களும், உடனே நீங்கும். செல்வமும், கல்வியும், தீர்க்காயுளும், களத்திரபுத்திரப்பேறும், இராசசன்மானமும், வெற்றியும், நினைத்தகாரியங்கள் சகலமுங் கைக்கூடப்பெற்று இன்புற்றுவாழ்வார்; இது திண்ணம்.]

கீர்த்தனைகள்

கீர்த்தனைகள்

விநாயகர் காப்பு விருத்தம்

சீர்மருவு பலவளங்க ளெள்ளுளுளுங்
குறைவின்றிச் சிறப்புற் றோங்கும்
பார்மருவு மணலநகர்ப் பதிவாழும்
மாசாத்தர் பதங்கள் பாடக்
கூர்மருவு மொருகொம்பு தனைமுறித்துக்
கயமுகனைக் கொன்று வென்ற
கார்மருவும் விகடதடக் கரிமுகத்துக்
கணபதிதாள் காப்புத் தானே.
பார்த்தனுக்குச் சாரதியாய் ரதத்தை யோட்டிப்
பாண்டவர்க்குத் துரியனையும் பகையாய் மூட்டிக்
கூத்ததிகம் செய்துவிளை யாாட்டுக் கொண்ட
கோவிந்த னேடரனும் கூடிச் சேர்ந்து
காத்தமைரெட் சிக்கவென்று தந்த வையா
கரமதனிற் செண்டுகொண்டு கடல்நீர் பொங்கி
ஆர்த்தலைகள் புடேசூழ அனலவாழு மரிஹரரு
மாரரெனக் கருள்செய் வாரே.

பல்லவி

ஐயனே அருள்தருவாய் - அணலநகர்
ஐயனே அருள் தருவாய்
மையலாகி உலகமாய்கை தனிலே வெம்பி
வந்தே னுனதுபத மலரடி தனைநம்பி - ஐயனே
பாதி மதிநதியைப் போதும் சடைக்கணிந்த
பரமனா ராயணப் பதியிலே வந்தமர்ந்த - ஐயனே
வாதும் கொலைகளவு சூதும்பொய் யோட
வந்துன் யடியார்கள் கூட்டத்திற் கூட - ஐயனே
ஆவிபோம் பொழுதுன்னைக் கூவிநா னழைத்திட
மேலி மதகரிமேல் பாவியடியேனுக்கு - ஐயனே
அன்றிந் திராணியைக் காத்திட்ட வீரனே
அசமுகி கையை அறுப்பித்த தீரனே
மண்டலத் தோர்கள் மகிழ்ந்து துதித்திட
வாருவா யென்னருகா கத்தருவா யுன்னிருபாதம்
பக்தர்கள் போற்றிப் பணிந்திடும் பாதனே
பாம்பணி யும்பரன் தந்திடும் நாதனே
கருணை —
சத்துரு சங்கார வொய்யார கெம்பீரனே
சரணஞ் சரண மையா தருணந் தருணம் வந்து

விருத்தம்

கஞ்சனைமுன் வென்றவனுங் கரியுரித்துப்
போர்த்தவனுங் கருணை கூர்ந்தே
அஞ்சலென வடியவரைக் காத்தருளத்
தந்தவையா வடியேன் மீது
வஞ்சகம்போ லிருக்காதே மனமகிழ்ந்து
வறுமையெலாம் மாற்ற வேயுன்
நெஞ்சமின்னு மிரங்காம னீரிருந்தா
லுமக்கிதுவும் நீதி தானே.

பல்லவி

யெனக்கருள் புரிவாய் மெய்யா
நெஞ்சிரக்க மில்லையோ என்னையா இப்போநீ
கருணை —
நெஞ் —

அனுபல்லவி

தஞ்சமென் றுனைவணங்கக் குஞ்சரந் தனிலிவர்ந்து
கஞ்சமலர்த் தாளிணைதந் தஞ்சலென் றெனையாளுவாய்
நெஞ் —

சரணம்

கன்னலுஞ் சென்னெலும் புடைசூழும் நயினாகுளம்
தன்னருகி லேநிதமும் வாழுமன்ன பூரணிபுட்கலை
நாளும் மனம்மகிழ அன்புடனணல நகராளும்
மன்னவனே யுன்னையன்றி யின்னிலந் தனிலெனக்கு
அன்னைதந்தை வேறுமுண்டோ ஐயனே யெனக்கருள
நெஞ் —
பட்சயுடனென்னருகில் வாராய் - சிறு
பாலகன் மனக்கவலை தீராய் -
கச்சணி தனச்சகிக்கு நோய்வந்து
காட்சிதந்து காத்தருளும் வீரா
அச்சுதனே டேயரனு மிச்சையுட னேயணைய
அக்கணத்தி லேயுதித்த
அப்பனே யெனக்கருள - நெஞ்சிரக்
வஞ்சகம்பொய் சூதுகொலை போக்கி - உந்தன்
மலரடி வணங்கவும் ஆளாக்கி
நெஞ்சினிற் கவலையெல்லாம் நீக்கி - இந்த
நேரமேயுன தருட்கண்ணோக்கிப்
பஞ்ச பாத கங்க ளெல்லாம் பஞ்சுபோற்
பறந்து மாள வஞ்சகஞ் செய்யாம
லென்முன் வந்தருள் தந்தெனையாளா - நெஞ்சிரக்

கலித்துறை

ஆயர் குலத்தி லசோதையின் பாலர னோடளித்த
செயனைச் சிந்தனை செய்யாம ஞானிச் செகந்தனிலே
காய மதனை நிலையென் றெண்ணிக்கயற் கண்ணியர்கள்
மாய வலைப்பட்டு வாழ்நாட் கழித்து மயங்கினனே.

பல்லவி

பாவி ஐயனே கடைக்கண் பாரும் மெய்யனே
மாயன் பாண்டவர் சகாயன் வெண்ணெயுண்ட
வாயன் தரும்பாலா
மாது பூரணை புட்கலை யென்னாளும்
மனதின் மகிழ்லோலா - பாவி
ஓடியுலகெ லாம்வாடி யுனைக்காணத்
தேடியிங்கு வந்தேன்பார்
மோடி செய்யாம லுனது பதமலர்
மோட்சந் தந்தே யெனக்கார் - பாவி
எந்தன் மனதுமகிழ்ந் திடவேயொரு
மைந்தனைத் தந்தருள்வாய்
தந்திமி தேறியே யுந்தன் மனமகிழ்ந்
தெந்தன்முன் வந்தருள்வாய் - பாவி

கட்டளைக் கலித்துறை

ஆட்டை யெடுத்துக்கொண் டம்பலத் தேநிற்கு
மாண்டியுடன்
ஆட்டை யெடுத்துக்கொண் டாயர் மனையி லலைந்
தவர்பெண்
ஆட்டை யெடுத்துக்கொண் டன்னாட வத்தை யளித்து
மகிழ்ந்
தாட்டை யெடுத்ததி னால்வந் தணல யமர்ந்தவனே.

பல்லவி

அணலப்பதி ஐயனே என்னை
ஆதரித் தருள்மெய்யனே,
அந்த ரத்தவர் நிலமும்
வந்தனை செய்தே வணங்கும் - அணல
வஞ்சமாம் பிரபஞ்ச மாயையில் வாடியேயுனை
நாடினேன்
வாது செய்யாமலேநீ யிப்போ தெனக்கருள் புரிவாய்
- அணல
சங்கு சக்கரக் கோதண்டக் கையன் றன்னோடு அரன்
தந்தவா
தாயிலு மினியவனே சேயனை விடஞாயமோ - அணல
மாயவாழ்வுமோயவேயெமன் வந்துமே
துன்பந்தந்துமே
மாட்டியேவலையில் சூலம்நீட்டியே குத்திடமுன்னம்
- அணல

கலித்துறை

கைப்பாசஞ் சூலங் கதைகொண் டெமன்கடா வேறி
வந்தால்
இப்பா ருலகி லெனக்கா ருதவியென் றேங்கியஞ்சி
அப்பா லணலப் பதியில்வந் தேனுன் னடைக்கலங்கார்
எப்போ விரக்கம் வருமோ வுமக்கெனை ரட்சிக்கவே.

பல்லவி

எப்போ யிரங்குமையனே உமக்கு மனம்
எப்போ யிரங்குமையனே
முப்போகமும் விளைவு தப்பாமலே செழிக்கும்
அப்பா அணலப்பதி ஐயா உமக்குமனம் - எப்போ
வாடியே மனதில் நொந்துதேடியுன் பதியில்வந்து
பாடியே யலர்பதங் கூத்தாடியு மிரக்கமில்லை - எப்போ
வஞ்சிபூரணை புட்கலை கொஞ்சிடும் கணவாவுன்னை
தஞ்சமென்றடிபணிந்து கெஞ்சவு மிரக்கமில்லை - எப்போ
எல்லையில்லா என்றுயரம் மெல்லமெல்லவே யுமக்கு
கல்லையும்முருக்கும்படி சொல்லவும் இரக்கமில்லை
- எப்போ

கலித்துறை

அரணத் தேவு மயிரா வதத்தனு மன்றுதொழ
வாரணத் தேறி வருமைய னேவகை யொன்றறியாக்
காரணத் தால்முழு மூடன் படித்த கவிப்பிழையைப்
பூரண மாகப் பொறுத்தே யருளைப் புரிகுவையே.

பல்லவி

என்ன சொன்னாலும் திருச்செவிக்
கேராடிருக்கும் வகையேதையா

அனுபல்லவி

அன்னம் பாலிக்கும் பொன்னம் புலத்தில் வாழும்
ஐயர் அருளால் வந்த மெய்யரே என்னாளும் - என்ன

சரணம்

சன்னதி முன்னின்று என்னைப்போ லேழைகள்
சரணஞ் சரண மென்பதாலோ
தாவிக் குயில்வந்து கூவிப் பூஞ்சோலையில்
சத்தம் வைத்திடு வதினாலோ
அன்னை தந்தையரைச் சன்னெ செய்திட்ேடனே
அல்லாம லுன்னடியாரை வைதிட்டேனோ - என்ன
பேரிகை சல்லரி மேளந் தடாரிகை
பேசும் முழுக்கத் தினாலோ
பெண்க ளிருவர்க்கும் பிள்ளையில் லாமனப்
பேதமை கொண்டதினாலோ
வார்செறி மத்தள தாளத்தி லாசையோ
வந்தடி யார் நிதம் போற்றிடு மோசையே - என்ன
அருகினி லின்று மாகாளருஞ் சேனையும்
ஆர வரிப்ப தினாலோ அது அல்லாமல் வாசலி
லண்டம் நடுங்கவெள் ளானை
சத்தம் வைப்பதாலோ
தருமமோ உமக்குச் சாமி தயவாகச்
சாற்றும் பதங்களை யேற்று அருள்புரி - என்ன
தாயாகும் மாயவன் ஆயர் வீட்டில்
வெண்ணை தயிர்தின்ற
தென்பதினாலோ
தந்தையிரந் துண்டா னென்றுலகில் சொல்லச்
சஞ்சலம் மிஞ்சின தாலோ காயாம் பூவண்ணனே
காதடைத் திட்டதோ காருங் காருமென்னக்
கறுவம் வந்திட்டதோ - என்ன

கலித்துறை

என்போடு கொம்பு தரித்தெரு தேறிடு மெங்கள்சிவ
சம்போடு சங்கரி தந்தவ னேதமி யேன்மகிழக்
கொம்போடு நால்வாய்ப் புழைக்கை யுளவெள்ளைக்
குஞ்சரத்தில்
அன்போ டமர்ந்தரு ளந்தாளணல் யமர்ந்தவனே

பல்லவி

அணலயம் பதிவாழ் ஐயன் பெருமை
ஆருக்குத் தான்தெரியும்

அனுபல்லவி

கணநாத ரெங்கணு மேபுடை சூழுமா
காளரும் வாள்கரத் தேந்தியே தாழ
மணமலர் வாசனை யந்தரம் நீழ
மாசாத் தனைக்கண் டென்பவம் மாள - அணலயம்
தும்புரு நாரதர் கின்னரர் பாட
தொந்ததோ மென்று கைத் தாளங்கள் போட
சிந்தை மகிழ்ந்துகந் தருவர்களாடச்
சிவசிவ வென்றந் தணர்களுங் கூட - அணலயம்
அரம்பாஸ் திரிகள் நாட்டியம் புரிய
அந்தரத் தில்மலர் மழையது சொரிய
வரம்பாற் றிகழ்நயி னாரருளப் பெரிய
வளங்களை யாவருஞ் சொல்லுதற் கரிய - அணலயம்
அம்பரத் தவர்வந்து தினந்தினங் கூடும்
ஐயன்சன் னதிவட பக்கத்தி னீடும்
தம்பிரான் சிதம்பரப் பெரியவர் காடும்
தனக்குமேற் புறத்தினிற் தீர்த்தமே னாடும் - அணலயம்
ஆ. ஐயம்பிள்ளைப்புலவர்.

ஐயனார் அகவல்

அரிஹர குமாரனே அணலநக ரையனே
பிரியமுட னடியரைப் பேணியே காத்திடும்
ஆழிவரு ணத்தனே ஊழிதோறும் நித்தனே
அண்டர்பர வையனே செண்டமர் கரத்தனே
அருவுருவி னேடரிய திருவுருவு மானவா
சரமசர மானவா தாவுபரி வாகன
ஆறங்க மானவா போருங்க ளானவா
அம்பர நிகம்பர அகம்பரம தானவா
அரிவை பூரணைபுட்க லைக்குமண வாளனே
பாதாம் புயத்தனே பீதாம் பரத்தனே
படிபுகழும் நிந்தனே கடகமும் மார்பனே
பூதசே னாதிபா பொழிகருணை வாரியாய்
ஐயனே மெய்யனே உய்யும்வா றறிகிலேன்
வாக்கினாற் கையினால் மனதால் வணங்கினேன்
காக்குமா றுன்பதங் கடைக்கணா லருளிய
மன்னரால் தென்மரார் மாறு தேவதைகளால்
பன்மராற் பலநவக் கிரக தீவினையினால்
அந்தகள் கொடுமையா லழலினா லிடியினால்
வந்து கன்மங்களால் வாரியா லரவினால்
உந்திடும் வினையெலா மோட்டியே யருள்புரி
சுந்தரத் தனலநகர் சந்ததமும் வாழ்கவே
மாதமும் மாரியாம் மழைவளம் பொழியவே
சீர்பெறப் பசுநிரைகள் பால்பழம் பெருகவே
உழவர்குடி வாழ்கவே தறுகண்மிடி மாழ்கவே
உன்கோயில் சூழ்கவே யென்பாவம் மாழ்கவே
செந்தா மரைச்சரன் தந்தாள வேணுநீ
வீரமா காளரோடு பாரிடர்கள் சூழவே
காவல்செய் தருள்தருங் கடவுளே நமோநம
வானோர்கள் பரவும் மாசாத்தா நமோநம
வலிய பூதாதியர்கள் தலைவா நமோநம
நானாகி நீயாகி நின்றாய் நமோநம
ஓம்நாத அரிஹர குமாரா நமோநம
தனிப்பாடல்கள்
பொருந்தொ ணாத பிறப்பினுக் கஞ்சியே
போக வஞ்சிப் புலம்பிடு வோர்க்கெலாம்
மருந்து வேறிலை யிப்புவி மீதிலே
மாம ருந்து மருந்தொன்று கேட்பிரேல்
திருந்து நல்நயி னார்குள நற்பதி
சிறந்த கூழா மரநிழல் தங்கியே
பொருந்தி வாழைய னாரைய னாரென்று
புகலு வோர்க்குப் பொதுமருந் தாகுமே
தேரும் மாவுஞ் சிவிகையும் யானையுஞ்
சேனை யும்பல செல்வமுங் கல்வியும்
பேருஞ் சீரும் பெருமையுங் கீர்த்தியும்
பெறுவ துன்னருள் பெற்றபின் பல்லவோ
கூரும் வேற்கைக் குமரன் துணைவனே
குன்ற வில்லியுங் கொண்டல்வண் ணத்தனும்
யாரும் போற்ற அருளிய மைந்தனே
அணல யம்பதி யாண்டரு ளையனே
வடமலைகள் கிடுகிடென மறுமலைகள் சாய
மழையினுடன் பிரசண்ட மாருதம டிக்கக்
கடல்குமுறி யலைபொருதிக் கலகலென வரவே
காராளர் கண்டுநின் றபயமுறை யிடவே
திடுதிடென யானைமீ தையனார் தோன்றித்
திக்கெட்டு மேபடைக ளேவியே நின்று
விடுவிடென வெடிவைக்க அஞ்சியே கடலும்
விசைகெட்டு அலைகெட்டு ஓய்ந்திட்ட தன்றே

தொகுப்பு: அனலையூர்

ஐ. ஆறுமுகம் அவர்கள்
கடவுட் கருணை

(1955ம் ஆண்டளவில் திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் அனலைதீவுக்கு வருகை தந்திருந்தார். திரும்பிச் செல்லும்போது அவருடன் கூட வந்திருந்த தினகரன் நிருபரிடம் இந் பாடல்களை திரு. கி. வா. ஜ. பாடிக் கொடுத்திருக்கிறார். மறுநாள் "தினகரன்" பத்திரிகையில் இவை பிரசுரமாகியிருந்தன. பாடல்களின் கீழ் "கலைமகள் ஆசிரியர் திரு. கி. வா. ஜகந்நாதன் அனலைதீவுக்கு விஜயம் செய்த போது தினகரன் நிருபரிடம் பாடிக் கொடுத்தது" என்று "தினகரன்" குறிப்பு எழுதியிருந்தது.)

நாற்புறமும் கடலலைகள் வீச மேலே
நலந்தருமக் காற்றசைய அன்பரோடே
ஏற்புறவே "ஸ்டீம் லோஞ்சி"ல் அனலைதீவுக்
கேகுகின்ற போதினிலே என்னே இன்பம்!
பாற்படுமவ் வீதிகளும் இல்லந்தாமும்
பரப்பாகக் காண்பதிலை புழுதியில்லை
தோற்பதிலை வெல்வதிலை சாந்தி என்னும்
தூய்நிலை கடலிடையே கண்டேன் யானே.
பேலேவின் நீலமுறு விதானம் போர்ப்ப
விரிந்த கடல்நாற்றிசையும் பாவாடைபோல்
காலமெதுவானாலும் அலைகள் வீசக்
கணடிருந்த காட்சியிலே கருத்துமூழ்கி
நீலநிறப் பாப்பியதுதான் மாலோன் மேனி
நீட்டமோ எனநினைந்தேன் முருகனேறும்
கோலமயில் வாகனத்தின் நிறமோஎன்று
கும்பிட்டேன் மனமயங்கே செருக்குற்றம்மா!
இயற்கையெழில் தனைக்கண்டால் மனிதன்செய்கை
எள்ளாகி எள்ளினிலும் எளிதாகிச்
செயற்கையெலாம் அழகற்ற நிலையேயாகிச்
சிந்தையிலே படுவதனைக் கவிஞர் கண்டார்
அயர்ச்சியெலாம் போக்கஇறை அருளை எண்ண
அழகான கவிதைதனைப் பார்க்கவேண்டின்
முயற்சியொடும் மலையெங்கே பொழில்கள் எங்கே
மூளாறெங்கே யென்றே தேடிச்சென்றார்.
பொழில்கண்டார் பொழிலினிலேமரத் தைக்கண்டார்
பொலிமரத்திற் கிளைகண்டார் கிளையிற்கொம்பும்
எழிலுடைய இலைப்பரப்பும் அதனினூடே
இலகுமலர் காய்கனிகள் இருப்பக்கண்டார்
பழகுமிவற்றைக் கண்டபோழ்தில் இந்தப்
பாரிலவைதமைச் செய்தகலை ஞன்தன்னை
அழகரிலே அழகனாம் இறைவன்சீரை
அகத்தினிலே நினைந்துருகிப் பாடினார்கள்.
அழகுடைய பொருளிலே இன்பம்காணல்
அம்புவியின் மனிதர்செயல் அகிலத்தெல்லாம்.
பழகுபொருள் யாவையுமே அமுதாகக்காணும்
பண்புடையார் அருட்கவிஞர் ரோஜாப்பூவில்
ஒழுகுகருணைக் கடவுள்தன்னைக் காண்பார்
உறுத்துமுள்ளில் அவனருளைக் காண்பார்
அழிவரியபொருள் அவன்றன்படைப் பெல்லாம்
அழகழகென்றே வாழ்த்தி அன்புசெய்தார்

தல வரலாறு

அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் தல வரலாறும் தேர்த் தத்துவமும்

ஐயனார் இங்கு எப்படி வந்தார்?

தேவர் விரும்பிய திருப்பதி அனலைப்பதி!

மூலம்: நாகேசுர படலம்

தொகுப்பு: அனலையூர் திரு. செ. தம்பையா அவர்கள்

பூம லக்குமியையும் மகாலக்குமியையும் உடைய மகாவிஷ்ணுவானவர் சிவனுக்கு விண்ணப்பித்த மாற்றங் கேட்ட பிரமாவானவர் மெய் புளகாங்கிதமுற்று, விம்மிதமடைந்து இறைவன் பாதாரவிந்தத்தில் வீழ்ந்து இறைபாதத்தைத் தம்முடியால் தேய்த்து 'ஆதியாகிய தாங்களும், மகாவிட்டுணுவும் ஒருங்கே யமைந்த ஐயனாரின் திருவுருவத்தைச் செம்மையாய் வழிபாடாற்ற இப்பூமியில் எவருமில்லை யென்றார். அதனைச் செவியுற்ற சிவன் திருமாலைப் பார்த்து "நான்முகன் மொழிந்த வடிவமைந்த அரிஹர மூர்த்தியை முன்னரே உமது கரத்தேற்ற முறைப்படி பூரணை, புட்கலை சமேதராயமைந்தருளினாய் அடியார்கள் அனலைதீவில் ஐயனாருக்கு ஆலயம் அமைத்து விடுவரென்றார். இதனைக் கேட்ட நாரணனார் இமையவரமிர்தத்தையருக்கிய போழ்தினும் மிக மகிழ்வுற்று இறை திருவாய் மலர்ந்தருளியவாறு பூரணை புட்கலை இருமருங்கும் அமையப் பூமியிலுள்ளோரனைவரையும் காக்கும் பொருட்டு வேதாகமங்களாலும் விளக்க வொண்ணாத ஹரிஹர சுதனையும் தேவியரிருவரையும் செம்பால் உருக்கியமைத்த பாங்காக ஓர் யானைத் தந்தத்தாலிழைத்த பேழையில் வைத்து, ஆகமங்களைக் காப்பிட்டு அலையில் அடையச் செய்தனர்.

மேலே குறித்த அனலைதீவில் மேன்மை கொள் சைவம் போற்றுகின்ற பெரும் பேறுற்ற அவ்வூரவர்கள் மேற்றிசையில் சமுத்திரத்தில் ஓர் பெட்டியைக் கண்டு மிக்க ஆனந்தமடைந்து கரைக்குக் கொணர்ந்தனர். இப் பெட்டகத்தைத் தாங்கி வந்தவர்கள் பாரம் பொறுக்க வியலாது பூமியில் வைத்தனர். அவ்விடமே நயினாகுளமெனும் திருப்பதியாகும். திரும்பவும் பேழையைத் தூக்க முயன்றபோது முடியாமையால் ஊரவர்கள் யாவரும் ஒருங்கு கூடித் தமக்குத் தாமே நிகரான அந்தப் பெட்டியைத் திறந்தபோது வானிலிருந்து, ''உங்களுக்குக் கிடைக்கப்பெற்றது ஐயனாரும், தேவியரிருவரும்'' எனவும், ''அவர்களை எந்நாளும் தவறாது துதித்துப் போற்றுங்கள்'' எனவும் அசரீரி கேட்டது.

அனலைதீவில் ஐயனார் உதயம்:

மேற்குறித்த விடத்தில் ஆலயம் ஐயனாருக்கு அமைந்தபின்னர் அனலைதீவு சிறப்புற்றோங்கியது. மக்கள் இன்னல்களின்றியும், திடீர் மரணங்களேற்படாமலும் ஐயனார் காத்துவருளானார். ஆயிரம்நூற்றாண்டுகட்கு முன்னர் ஷை தீவை இருளானது சூழ, வாயுவுக்கும், வருணனுக்கும் பெரும் போர் மூண்டு தம்மில் யார் வலியுடையாரெனப் பரீட்சித்தகாலை மேய் சமுத்திரமானது சினமுற்றுப் பொங்கி அனலைதீவை அழித்து விடுமோ வெனச் சகலரும் அஞ்சினர். அக்கcrossசேமமே யாவரும் மனம் பதைபதைப்ப மேலவனும், அரியுமீந்த சாத்தனது உறையுள் (ஆலயத்துள்) தனித்தனியே புக்கு "எமைக் காக்க வேண்டும் ஐயனாரே" யென ஓலமிட்டனர். அடியாரின் அபயக்குரலைக் கேட்ட ஹரிஹரப் பெருமான் தமது மெய்காப்பாளரான வீரமாகாளரும், மறு கணங்களும் துடிகளுடன், மற்றும் பல்லியங்களும் ஒலிப்ப பெலிமூழக்கஞ் செய்து அட்டகுல கிரிகளும் அசைந்திடிந்த பேரொலிபோல் ஒலிக்க எழுகடலுமடங்கிற்று. அற்றைநாள் தொடங்கி இற்றைநாள் வரையும் எமது ஐயனார் அடியார்களைக் காப்பதோடு, கார்மேகம் போன்ற கருங்கூந்தலையுடைய மாதரார் கற்பையும், அவர்தங் கொழுநரையும் காக்குமாறு நோக்கும் நோன்பின் பயனையுமருளி வருகிறார். பாலர்முதல் விருத்தரிறாக ஐயன் திருநாமத்தை உச்சரித்தே உறங்கி விழிப்புறுகின்றனர்.

மறைக் குலத்தவர் ஒருவர் தமது குலப் பெண்களிருவரை மணம் புரிந்து வாழ்ந்து வந்தார். அவர்கள் ஐயனாரை தோற்றுவித்தனர். இளையாளாகிய சுந்தரி அவனருளால் ஓர் ஆண் மகவைப் பெற்றாள். அக்குழந்தையை மூத்தவளாகிய (தமக்கை) பைந்தொடியாள் கண்ணையிமை காப்பதுபோல் காத்து வரலானாள். இவ்வாறாகிய நாளில் காத்தற் கடவுளாகிய திருமாலானவர் அனலைதீவின் தென் எல்லையாகவுள்ள 'புலியெத்தி' என்று அழைக்கப்படும் புலியந்தீவிலிருந்து பாம்புருவுடன் மலர் கொண்டு சென்று நயினாதீவு நாகேஸ்வரியை வழிபடும் செயலைத் தங்குலத்தவராலறிந்து தாமும் அம்பிகையை வணங்கும் விருப்பால் தமது கொழுந்தனுடன் இடையிலுள்ள பாம்பனைக்கடந்து போனார்கள். தமது அருமை மைந்தனைப் பைந்தொடியாள் பாதுகாப்பில் விட்டுச் சென்றனர். அம்பிகையை வழிபாடு செய்தபின்னர் கங்கை பெருக்கதிகரித்ததினால் ஓடக்காரர் கங்கையைக் கடக்க அஞ்சினர். அற்றை இரவு சுந்தரியும், கொழுநனும் தமது சுதனை விட்டுப் பிரிந்த வேதனை காரணமாக அரிஹர சுதனையே வாயார வாழ்த்தி நின்றனர்.

பைந்தொடியானவள் பிள்ளை அழுததினால் தமது மடியிலிருத்தி அன்பால் ஆன் பாலை ஊட்டினாள். அக்கcrossசேமமே (பால் புரைக்கேறி) பிள்ளை அசைவறதிருந்தது. பைந்தொடியாள் மனம் மிக நொந்து பிள்ளையைக் கொன்றுவிட்ட பாவம் தம்மை வாழ்நாள் முழுவதும் வருத்துமெனும் பழிக்கஞ்சி அடியற்ற மரமென நிலத்தில் வீழ்ந்தாள். பின்னர் ஒருவாறெழுந்து, சுந்தரியானவள் வந்து தம்மிடம் ஒப்படைத்த பிள்ளையைக் கேட்பின் ''யாது பகர்வேனெனத் துயரக்கடலில் மூழ்கி ஐயனார் ஆலயமடைந்து நடந்தவற்றை யுன்னிப் புலம்பினாள். "ஐயனே' என்றரற்றினாள். அவ்வொலி கேட்டதும் ஐயன் வாரணமதனில் பூரணை புட்கலையுடன் அவள் முன் தோன்றினார். தன் வயிற்றிலடித்துத் துயருருவாய் அமைந்த பைந்தொடியை நோக்கி பிள்ளையின் பசியைத் தீர்க்க நீ உவந்து பாலுட்டிய காரணத்தாலேற்பட்ட கல்லை நீங்குமென்று திருவாய் மலர்ந்தருளினார். வேத கோஷங்களுடன் ஐயன் எழுந்தருளி அருள் பாலித்ததும் பிள்ளையும் எழுந்தது. ஐயனருள் பெற்றெழுந்த அக்குழந்தையும் மாயனார் கையிலேந்திய ஐயனார் திருக்காட்சியைக் கண்டு மனமயக்கொழிந்து நிற்க, குழந்தையைப் பிரிந்து முதலிரவு தங்கிய அன்னையும், பிதாவும் முன்வந்து பிள்ளையைத் தம்கரத்திலேற்றிக் கண்களில் ஒற்றி மகிழ்ந்தனர். 'அருந்தவக் கொழுந்து அழாதிருக்க யாது புரிந்தீரென' பைந்தொடியாளைக் கணவர் வினவ, நடந்த வரலாற்றினைத் தவறாது மொழிந்தாள். சுந்தரியும், பைந்தொடியாளும், கணவரும் ஐயன்பால் மாறா நோன்பியற்றினர். இதனைப் போன்று எத்தனையோ திருவருட் செயல்களை ஐயனார் அருளினாரெனக் கர்ணபரம்பரையாக முன்னோர் புகன்றுளர்.

தேர் தத்துவம்

பகுதி:

பகுதியிலுள்ள இருகுதிரை வடிவங்கள் இடப்பாக, சந்திர சூரிய கலாவாசிகள், உலப்பகுதியிலுள்ள இரு குதிரை வடிவங்கள் வலப்பாக சந்திர சூரிய கலாவாசிகள், (நான்கு குதிரைகளையும் நான்கு வேதங்களாகவும் கொள்ளலாம்) சாரதிவடிவம் மும்மல ரூபமும் நாசியுமாம்.

மூன்றாமடுக்குப் புருவமத்தி (மேலண்டம்)
நான்கா மடுக்கு: இலலாட மத்தி
ஐந்தாமடுக்கு: மஸ்தகாந்த ஸ்தானம்.
ஆறாமடுக்கு: மஸ்தக மத்தியஸ்தானம்.
ஏழாமடுக்கு: மஸ்தக ஆதித்தானம்.
எட்டாமடுக்கு: துவாத சாந்தத்தானம்.
கலசம் - முடி சோடசாந்தத் தானம்.
உச்சிக்குடை: பிரமரந்திரம்.

எனவே, சக்கரங்களாகிய தசவாயுக்களை நிறுத்த அசைதல் முதலிய வினைகள் ஒழியும். சிலர்கள் தம்பனத்தை முறையே யேலாக விளங்கும் உந்திக் குண்டலியிலிருந்து நாபிக்கும் பின் இருதயத்திற்கும், அங்கிருந்து கண்டம், வாய், நாசி இரு கண்கள் இவைகளின் வழியாய் மேலே நோக்கி லயப்படுத்தி அங்கிருந்து புருவ மத்தியத்திலும், அங்கிருந்து ஏனைய அடுக்குகளாகிய மஸ்தக அந்தம், மத்தி, ஆதித்தானங்களிலும், துவாத சாந்தத்திலும் லயப்படுத்தி அங்கிருந்து உச்சிக் குடையாகிய பிரமரந்திரத்தில் ஏற்றி லயப்படுத்தி, பரமானந்த நிலையாக வேண்டுமென்பதைத் தேர் அறிவுறுத்துகின்றது. இத் தத்துவத்தை நீ தேர்ந்து கொள் என்ற கருத்துப் படவே தேர் எனவும் அழைக்கப்படுகின்றது.

"அஞ்செழுத்தா லுள்ள மரனுடமை கண்டரனை

அஞ்செழுத்தா லர்ச்சித் இததயத்தில் - அஞ்செழுத்தால்

குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சாதிக்கில்

அண்டனாம் கேடனாமங்கு"

— சிவ. போத: 9 ஆம் சூத்; அதி 3, உதா: வெண்-6.

மற்றொருவகையில் தேர் சரீரம்;

(அ) நான்கு சிங்கங்களாவன: லோப ரூபம், சர்வவித ஆசைப்பெருக்க சங்கற்பவிருத்தி, சர்வவித அபிமான கோலாகல விபரீதம், சர்வவித அகங்கார கோபதாபவிகாரம் என்னும் நான்குவித கர்ம விருத்திகள்.

(ஆ) எட்டுயாளிகள்: அஞ்ஞானம், அபிமானம், ராகாதி குணங்கள், துக்கம், விடயவாசனை, நானாவித கன்மம், உபாதி, அவஸ்தை என்னும் எட்டுவித அனுபவங்கள்.

(இ) கொடிகள்: தத்துவக் கூட்டங்கள்.

(ஈ) மணிகள்: பீஜமந்திர பிரணவாதி சத்தங்கள்.

(உ) குஞ்சங்கள்: எண்பத்துநான்குலட்ச யோனிபேதங்களில் மாறிமாறித் தோன்றும் மரணாவஸ்தை.

எனவே, சிங்கங்களையொத்த தர்மவிருத்திகளையும், யாளிகளைப் போன்ற அனுபவங்களையும் கொடிகளைப் போன்ற தத்துவக் குழாங்களையும், மணிகளைப் போன்ற வாக்கொலிகளையும், குஞ்சங்களைப் போன்ற மனச் சலனங்களையும் இல்லையென்னும்படி செய்து, சித்திரத்தீபம் போலநின்று மோனசாட்சாத்கார நிலையை அடைய வேண்டுவதைத் தேர் குறிக்கின்றது என அறிக.

(சங்காரத் தொழில் - திரிபுய நிலை)

" கண் திறந்தருளுவாயே "

அனலையின் தலைவநீ ஐயநீ தேர்மிசை
ஆடிவர அன்பு கொஞ்சும்
அணியிழை மங்கையர் மருங்கிலே கூடிவர
அவனியில் மாரி மிஞ்சும்
தனமான தமிழ்தனில் தத்துவப் பாடல்வர
பத்திநிலை முத்தி வழியும்
தரணியில் நின்னருள் சால்பினை அளித்திடும்
தன்மையோ டமைதி பொழியும்
மனதிலே ஐயனின் கோலமே நாளுமாய்
மகிழ்கின்ற தொண்டர் கண்கள்
மாபெரும் தேரிலே மன்னநீ ஊர்கின்ற
மாட்சியே வேண்டி நிற்கும்
கனமான அனலையின் கடவுளே கருணைவளர்
ஹரிஹரன் பெற்ற தேவே
கண்கொளாதா நினதுதேர் வெள்ளோட்டம் கண்டிட
கண் திறந்தருளுவாயே

— " ஹரிஹரப்பிரியா "